அமெரிக்க பயணம்

doctore

அடுத்த வாரத்தில் அமெரிக்க பயணம். இந்த முறை 20 நாட்கள். ஜூலை 1 முதல் 18 வரை மூன்றாவது முறையாக, ஃபெட்னா எனும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை பெருவிழாச் சங்கமத்தில் கலந்துகொள்கின்றேன். இம்முறை பேரவை நிகழ்வில், தனி அமர்வாக சித்த ஒருங்கிணைந்த மருத்துவக் கருத்தரங்கு நடைபெறுகின்றது. அமெரிக்காவின் பல நவீன மருத்துவ விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், சித்தர் யோக ஆய்வாளர்களும் கூடவே மணிப்பால் பல்கலைக்கழக ஆய்வறிஞர் சித்த மருத்துவர் அருள் அமுதன், இந்திய நலவாழ்வு நல்லற தலைமை சித்த மருத்துவர் செல்வ சண்முகம் இவர்களுடன் நானும் உரையாற்றுகின்றேன்.

சித்த மருத்துவத்தில் ஆய்வு, தர நிர்ணயம் அதன் பல கூறுகளை அறிவியல் தரவுகளுடன் உலகிற்கு உரக்கச்சொல்வதும் அமெரிக்காவில் பயிலும் நவீன மருத்துவ மாணவரிடையே அங்கு ஆய்வு செய்யும் அறிவியல் அறிஞர்களிடையே எடுத்துச்செல்லவும் இந்த அமர்வு வட அமெரிக்கப் பேரவையால் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இம்முறை வட அமெரிக்கப் பேரவை நிகழ்வு நியூயார்க் நகரில் ஜூலை 1,2.3 தேதிகளில் நிகழ்கின்றது. அடுத்ததாய் வாஷிங்டன் நகரில் இயங்கி வரும் ஶ்ரீபக்த ஆஞ்சனேயா கோயில் ஜூலை 10அன்று நடத்தும் சித்த மருத்துவ நலவாழ்வியல் கருத்தரங்கு, அதன் பின்னர் சவுத் கரோலினா மாநிலத்தில் சார்ல்ஸ்டன் நகரில் ஜூலை 13,14 பல்கலைக்கழகத்தில் உரை, இறுதியாக ஜூலை 16 அன்று கலிபோர்னியா மாநில தமிழ்ச்சங்கம் நடத்தும் கருத்தரங்கில் உரை என இப்பயணம் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் என செறிவாய்த் திட்டமிடப்பட்டுள்ளது.

மருத்துவர் கு. சிவராமனின் வட அமெரிக்க பயணத்திட்டம்

icons
01-07-2022 &
04-07-2022
நியூயார்க் நகரம்

ஜூலை 1-4 வரை நியூயார்க் நகரம். ஃபெட்னா வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவை விழா.

icons
10-07-2022
வாஷிங்டன் நகரம்

ஜூலை 10 வாஷிங்டன் நகரம். ஶ்ரீபக்த ஆஞ்சனேயா கோயில் நடத்தும் கருத்தரங்கு
தொடர்பிற்கு- +1 (240) 656-9280

icons
13-07-2022 &
14-07-2022
சவுத்கரோலினா தமிழ்ச்சங்கம்

ஜூலை 13,14 சார்ல்ஸ்டன் , சவுத்கரோலினா தமிழ்ச்சங்க நிகழ்வு தொடர்பிற்கு- +1 (843) 864-7787

icons
16-07-2022
பே ஏரியா தமிழ்ச்சங்கம்

ஜூலை 16 பே ஏரியா தமிழ்ச்சங்கம், கலிஃபோர்னியா கருத்தரங்கு தொடர்பிற்கு- +1 (510) 364-8016

பயணங்களும், அறிவுப்பகிர்தலும், செறிவான உரையாடலும் எப்போதுமே புதிய வெளிச்சங்களை காட்டி, கூடுதல் புரிதல்களைக் கொடுத்து, நம்மை உத்வேகத்துடன் நகர்த்தும்! வாருங்கள் சந்தித்து உரையாடலாம், அமெரிக்க மண்ணில்..